சிவில் சொசைட்டி நிகழ்வு ஆய்வு: WWF
"உலகளாவிய ஆடை தொழிற்சாலைகள் பற்றிய திறந்தநிலை, அணுகக்கூடிய விவரங்களைக் கொண்டிருப்பது, முதலிலிருந்து ஆடை உற்பத்தி மண்டல தரவை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியமின்றி, விநியோகப் பிரச்சினைகள் மற்றும் சாத்தியமான எதிர்மறை (மற்றும் நேர்மறையான) பல்லுயிரினங்கள் அல்லது நீர் மீதான தாக்கங்களை விரைவாகக் கண்டு அடையாளம் காணவும் எங்களுக்கு உதவுகிறது."
திறந்தநிலை ஆடை பதிவேடு பல்வேறு வழிகளில் எங்கள் உத்திகளை முன்னெடுக்க எங்களுக்கு உதவியது - முன்னுரிமை பாதுகாப்பு புவியியலில் உள்ள தொழிற்சாலைகளுடன் இணைந்த சாத்தியமான பிராண்டு பங்குதாரர்களை அடையாளம் காட்ட அனுமதிப்பது முதல், உலகெங்கிலும் ஆடை உற்பத்தி மண்டலங்களின் விநியோகம் குறித்த பார்வையை எங்களுக்கு வழங்குவது வரை.
இது முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்கப் போக்குகளை கண்டறிய எங்களுக்கு உதவுகிறது மற்றும் நன்கொடையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து பெற்ற நிதிகளைப் பயன்படுத்துவதில் மிகவும் மூலோபாயத்துடன் செயல்பட உதவுகிறது. ஆசியா முழுவதிலும் உள்ள நீர்த்தடங்களுக்கும் ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளுக்கும் இடையிலான காட்சி ஒன்றுடன் ஒன்று குறிப்பிடத்தக்க வகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது- OAR தரவை நாங்கள் பயன்படுத்திக் கொண்டபோது உடனடியாக தெளிவாகியது. இந்த போக்குகளைப் பார்க்கவும் புரிந்துகொள்ளவும் OAR எங்களுக்கு உதவுகிறது, இதையொட்டி, மக்களுக்கும் கிரகத்திற்கும் எங்கள் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு முயற்சிகளை முன்னெடுக்கிறது.
பயல் லுத்ரா, குளோபல் அப்பேரல் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் லீட், WWF
WWF தொழிற்சாலை பரவியுள்ளதை ஆராய்கிறது
WWF இன் நீர் மேற்பார்வைக் குழு ஆடைத் தொழிற்சாலை உலகம் முழுவதும் எவ்வாறு பரவியுள்ளது மற்றும் தொழிற்சாலைகளின் இத்தகைய உலகளாவிய பரவல் நன்னீர் மற்றும் பல்லுயிரினத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயன்று வருகிறது. இதைச் செய்வதற்கு அது பயன்படுத்தும் கருவிகளில் ஒன்று திறந்தநிலை ஆடை பதிவேடு உதாரணமாக, OAR இல் உள்ள ஆடை ஹொழிற்சாலைகளின் வரைபடத்தின் மேலாக உலகின் நீர்த்தடங்களின் வரைபடத்தை வரையும்போது, நீர்த்தடங்கள் மற்றும் ஆடை உற்பத்தி மண்டலங்க ஆகிய இரண்டும் தொடர்ச்சியாக பொருந்தியிருப்பது உடனடியாகத் கண்ணுக்குத் தெரிகிறது .
இந்தத் தகவல் WWF க்கு அவர்கள் நீர்த்தடங்களின் பாதுகாப்பை முன்னெடுத்துச் செல்ல யாரை அணுக வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள உதவுவது மட்டுமல்லாமல், ஆடைத் துறைக்கு பயனளிக்கக்கூடிய சாத்தியமான நீர்த்தடங்களின் மறுசீரமைப்பு பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட உற்பத்தி தொழிற்சாலைகளை அடையாளம் காணவும் களம் அமைக்கிறது. இது இயற்கை அடிப்படையிலான தீர்வுகளில் முதலீட்டிற்கான ஒரு வலுவான நிலையை உருவாக்கவும், பல்லுயிரினத்திற்கான நிதியை திரட்டவும் உதவுகிறது.

WWF என்பது உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு NGO ஆகும், அதன் நோக்கம் பூமியின் இயற்கை சூழலின் சீரழிவைத் தடுத்து நிறுத்துவது மற்றும் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றிவாழும் ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதாகும்.