தொழிற்சாலை நிகழ்வு ஆய்வு: TAL அப்பேரல் லிமிடெட்

"எங்கள் விநியோகச் சங்கிலித் தகவல்களை (சப்ளையர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்கள்) சரிபார்க்கவும், விநியோக சங்கிலி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கவும் தேவையான தளத்தை OAR வழங்குகிறது. மேலும், ஹிக் குறியீட்டெண்ணுடனான இதன் ஒருங்கிணைப்பு மூலம், நாம் வெறும் ஒரு கிளிக்கில் அனைத்து தகவல்களையும் பார்க்க முடியும்!"

TAL அப்பேரல் லிமிடெட் அவற்றின் விநியோகச் சங்கிலி நெட்வொர்க்கை நம்பிக்கையுடன் வளர்த்து வருகிறது

TAL அப்பேரல் லிமிடெட் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. எனவே தங்கள் துணை ஒப்பந்த நெட்வொர்க்கையும் பெரிதாக்க விரும்புகிறார்கள். திறந்தநிலை ஆடை பதிவேடானது விரைவாக சாத்தியமான துணை ஒப்பந்த தொழிற்சாலைகளைப் பற்றிய முக்கிய விவரங்களை அறிய TAL அப்பேரலுக்கு உதவுகிறது, எனவே அவர்கள் நம்பிக்கையுடன் வளர முடியும்.

அதே நேரத்தில், " ஒரு தொழிற்சாலையை கோருதல்" அம்சத்தின் மூலம், தங்கள் தொழிற்சாலைகள் பற்றிய கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தளத்தை வழங்குவதன் மூலம் விநியோகசங்கிலி வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்க TAL அப்பேரலுக்கு OAR உதவியுள்ளது.

தொழிற்சாலையின் வகை, தொழிலாளர்களின் எண்ணிக்கை, சான்றிதழ்கள் மற்றும் இன்னும் பல விவரங்களைப் பட்டியலிட்டு, தங்களது ஒவ்வொரு தொழிற்சாலைகளுக்கும் OAR சுயவிவரங்களை அவை கோரியுள்ளன.

TAL அப்பேரல் ஒரு நிலையான ஆடைக் கூட்டணியில் கையெழுத்திட்டுள்ளது மற்றும் ஹிக் குறியீட்டெண்ணைப் பயன்படுத்துகிறது. திறிந்தநிலை ஆடை பதிவேடு மற்றும் ஹிக் ஆகியவற்றுக்கு இடையேயான API ஒருங்கிணைப்புக்கு நன்றி, TAL அப்பேரல் குழுமம் இப்போது ஒரே கிளிக்கில் ஹிக் மூலம் தங்களின் அனைத்து விநியோகச் சங்கிலித் தகவல்களையும் (OAR ID கள் உட்பட) காணமுடியும்.

Image shows the logo of TAL Apparel.

உலகளாவிய TAL குழுமத்தின் ஒரு பகுதியான TAL அப்பேரல் லிமிடெட் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் 6 தொழிற்சாலைளைக் கொண்டுள்ளது, மேலும் ஆடை விநியோக சங்கிலியின் பல்வேறு நிலைகளில் ஆடை உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்குகிறது.