திறந்தநிலை ஆடை பதிவேட்டை எவ்வாறு தேடுவது

திறந்த ஆடை பதிவேட்டில் இருந்து தரவுகளை எவரும் இலவசமாகத் தேடவும் பதிவிறக்கவும் முடியும். தொடர்ந்து வளர்ந்து வரும் தரவுத்தளத்துடன், உங்களுக்குத் தேவையான தரவை பெற விரைவாக எவ்வாறு தேடுவது என்பது உங்களுக்குத் தெரிந்துள்ளது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம்.

OAR ஐத் தேடுவதற்கான சில சிறந்த வழிகள் இதோ:

நிறுவனம் வாரியாக வடிகட்டவும்:

  • இது என்ன? OAR க்கு தரவை வழங்கிய நிறுவனம் வாரியாகத் தேடவும். இது ஒரு குறிப்பிட்ட பிராண்டாகவோ (டார்கெட் கார்ப்பரேஷன், கேப் நிறுவனம் அல்லது லெவி ஸ்ட்ராஸ் & கோ முதலியவை), பல பங்குதாரர் முன்முயற்சியாகவோ (ஹிக் அல்லது ZDHC பவுண்டேஷன் முதலியவை), சான்றிதழ் திட்டமாகவோ (ஃபேர் டிரேட் USA அல்லது OEKO-TEX முதலியவை) இருக்கலாம் அல்லது தங்கள் முழு தொழிற்சாலை பட்டியலையும் வழங்கிய ஒரு தொழிற்சாலை / சப்ளையர் குழுவாக (ஹிர்தராமணி குழுமம் அல்லது டெல்டா கலில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முதலியவை) இருக்கலாம்.
  • இதை எப்போது பயன்படுத்த வேண்டும்? ஒரு பிராண்ட் எந்தெந்த தொழிற்சாலைகளிலிருந்து சோர்ஸிங் செய்கிறது, எந்தெந்த தொழிற்சாலைகள் ஒரு குறிப்பிட்ட சான்றிதழ் திட்டத்தால் சான்றளிக்கப்படுகின்றன, அல்லது உதாரணமாக ஹிக் குறியீட்டெண் போன்ற ஒரு தளத்தில் ஒரு தொழிற்சாலை பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைப் பற்றி புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அந்த நிறுவனத்தைத் தேடும்போது, அவர்கள் OAR க்கு வழங்கிய தொழிற்சாலைகளின் பட்டியலை நீங்கள் காணலாம்.

தொழிற்சாலை வாரியாக வடிகட்டவும்

  • இது என்ன? ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலை பற்றிய விவரங்களைக் கண்டறிய தொழிற்சாலையின் பெயர், தொழிற்சாலை குழுமத்தின் பெயர் அல்லது OAR ID படி தேடவும்.
  • எப்போது பயன்படுத்த வேண்டும்? ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையுடன் எந்த நிறுவனங்கள் தொடர்புடையவர்கள் என்பதைப் பார்க்க தேடுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையின் பெயர் அல்லது முகவரி உங்களிடம் உள்ளது ஆனால் OAR ID தேவைப்படுகிறதா அல்லது OAR ID உங்களிடன் உள்ளது ஆனால் தொழிற்சாலையின் பெயர் அல்லது முகவரி தேவைப்படுகிறதா? அப்படியெனில் இதுதான் உங்களுக்கான தேடல்.

நிறுவனம் மற்றும் தொழிற்சாலை வாரியாகத் தேடுவது மட்டுமல்லாமல், நிறுவன வகை (பிராண்டுகள், சிவில் சொசைட்டி, MSI க்கள் முதலியவை), நாடு மற்றும் வரைபடத்தில் நீங்கள் வரையறுத்துள்ள ஒரு குறிப்பிட்ட பகுதி / பிராந்தியம் வாரியாகவும் தேடுதலை மேற்கொள்ளலாம்.

ஆனால் இந்த தேடல்கள் ஒவ்வொன்றையும் நீங்கள் ஒவ்வொன்றாக செய்யவேண்டியதில்லை என்பதை தெரிந்துகொள்வது முக்கியம், இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது:

கூட்டு தேடல்:

  • இது என்ன? ஒரு தொழிற்சாலை குழுமம் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடு, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பிராண்டுகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அல்லது பிராண்டுகளின் பட்டியல் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடு முதலிய பல்வேறு அளவுகோல்கள் படி தேடவும்.
  • எப்போது பயன்படுத்த வேண்டும்? பல பிராண்டுகள் ஒரே தொழிற்சாலைகளிலிருந்து சோர்ஸிங் செய்கின்றனவா என்பதைப் புரிந்துகொள்ள தேடுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது பிராண்டுகள் ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது அந்த நாட்டில் உள்ள ஒரு பிராந்தியத்தில் இருந்து சோர்ஸிங் செய்கின்றனவா என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் தொழிற்சாலைகளில் எத்தனை குறிப்பிட்ட சான்றிதழைப் பூர்த்தி செய்கின்றன என்பதைப் பார்க்க விரும்புகிறீர்களா? OAR தரவை இன்னும் ஆழமாக தோண்டி எடுக்க தனிப்பட்ட தேடல் அளவுகோல்களை இணைக்க கூட்டுத் தேடல் உங்களுக்கு உதவுகிறது.

விரைவு உதவிக்குறிப்பு: பல நிறுவனங்களுக்கு இடையே ஒரு கூட்டுத்தேடலை இயக்கும் போது, "பகிரப்பட்ட வசதிகளை மட்டுமே காண்பி" என்ற ஒரு செக்பாக்ஸ் தோன்றும். நீங்கள் தேடும் நிறுவனங்களுக்கு இடையே ஒன்றுடன் ஒன்று பிணைந்த தொழிற்சாலைகளை மட்டுமே பார்க்க விரும்பினால், அந்த செக்பாக்ஸைத் டிக் செய்யவும். நீங்கள் தேடும் அனைத்து நிறுவனங்களுக்கும் முழு பட்டியல்களைக் காண விரும்பினால், அதை டிக் செய்யாமல் விடவும்.

உங்கள் தேடல் முடிவுகளை பதிவிறக்கவும்

நீங்கள் OAR இல் இயக்கும் எந்தவொரு தேடல் முடிவுகளையும் ஒரு CSV அல்லது எக்ஸெல் கோப்பில் பதிவிறக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த கோப்பில் தொழிற்சாலையின் பெயர், முகவரி, GPS ஒருங்கிணைப்புகள் மற்றும் OAR ID ஆகியவை மட்டுமல்லாமல், ஒவ்வொரு தொழிற்சாலையுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அடங்கும்!

தேடல் எவ்வாறு செயல்படுகிறது?

தேடல் லாஜிக்கின் வகைகள்

ஒரு தேடல் புலத்தில், கருவி " அல்லது" என்ற லாஜிக்கைப் பயன்படுத்துகிறது. எனவே, நிறுவனம் புலத்தில் ஆல்டி, ஹேன்ஸ் மற்றும் லுலுலெமன் என ஒரு பயனர் தேடினால், அந்த நிறுவனங்களுடன் தொடர்புடைய அனைத்து தொழிற்சாலைகளும் முடிவுகளாகக் கிடைக்கும். இருப்பினும், "நிறுவனம் வாரியாக வடிகட்டவும்" என்பதன் கீழ், நீங்கள் பல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து, "பகிரப்பட்ட தொழிற்சாலைகளை மட்டும் காண்பி" பெட்டியைத் தேர்ந்தெடுத்தால், லாஜிக் "மற்றும்" க்கு மாறும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இணைந்துள்ள தொழிற்சாலைகளை மட்டுமே முடிவுகளாகக் காண்பிக்கும்.

ஒரு பயனர் பல அளவுகோல்கள் கொண்டு தேடினால், "மற்றும்" தர்க்கம் பயன்படுத்தப்படும். எனவே, ஆல்டி, ஹேன்ஸ் மற்றும் லுலுலெமன் (நிறுவனங்கள்) மற்றும் சீனா (நாடு) முதலியவற்றைத் தேடுவது அந்த பிராண்டுகளை வழங்கும் சீனாவில் உள்ள தொழிற்சாலைகளை மட்டுமே முடிவுகளாகக் காண்பிக்கும்.