திறந்தநிலை ஆடை பதிவேட்டில் நகல்கள் மற்றும் மூடப்பட்ட தொழிற்சாலைகளை எவ்வாறு தெரிவிப்பது

OAR இல் ஒரு நகல் என்று கருதப்படுவது எது (அவற்றை எவ்வாறு தடுப்பது மற்றும் தெரிவிப்பது)

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் உள்ள தரவுகள் ஆடைத் துறையில் உள்ள பங்குதாரர்களால் அளிக்கப்படுகிறது. இத்தகைய பரந்த அளவிலான நிறுவனங்கள் தினசரி அடிப்படையில் கருவிக்கு தரவை அளிக்கும் நிலையில், OAR இல் உள்ள தொழிற்சாலை தரவு முடிந்தவரையில் துல்லியமானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதி செய்ய OAR கடினமாக வேலை செய்கிறது.

நடைபெற்றுக்கொண்டிருக்கும் தரச் சீர்பாட்டு பணியின் ஒரு பகுதியாக, OAR குழு தரவுத்தளத்திற்குள் உள்ள நகல்களை அகற்றுவதற்கு விரிவான வளங்களை அர்ப்பணித்து பணிபுரிந்து வருகிறது.

OAR இல் ஒரு நகல் உள்ளீடாகக் கருதப்படுவது எது (மற்றும் நகலை சரிசெய்ய வேண்டும்). பின்வரும் வழக்குகள் நகலாகக் கருத்தப்படும்

 • ஒரே முகவரியில் இருக்கும் ஒரு தொழிற்சாலைக்கு பல உள்ளீடுகள் இருந்தால்:
 • ஒரே பிரிவு/ மனை/ கட்டிட எண் (கள்) கொண்ட ஒரு தொழிற்சாலைக்கு பல உள்ளீடுகள் இருந்தால்
மேலும்
 • ஒரே பெயரைக் கொண்ட ஒரு தொழிற்சாலைக்கு பல உள்ளீடுகள் இருந்தால் (அல்லது ஒரு தொழிற்சாலைக்கு பல ஆங்கில மொழி பெயர்கள் உள்ளன என்பதை தொழிற்சாலை மேலாண்மை சரிபார்த்தது)

அப்படியெனில் அந்த உள்ளீடுகளை இணைக்க வேண்டும்.

OAR இல் ஒரு நகல் உள்ளீடாகக் கருதப்படாதது எது (மற்றும் தனிப்பட்ட தொழிற்சாலை சுயவிவரங்களாக விடவேண்டும்)

 • ஒரே பெயர் மற்றும் /அல்லது முகவரி கொண்ட தொழிற்சாலைகள், ஆனால் வெவ்வேறு பிரிவு/ மனை/ கட்டிட எண்கள் கொண்டது*
 • ஒரே பெயரில் உள்ள தொழிற்சாலைகள் ஆனால் வெவ்வேறு முகவரிகள் கொண்டவை அல்லது ஒரே முகவரியில் இருக்கும் வெவ்வேறு தொழிற்சாலைகள்

* தனிப்பட்ட பிரிவுகள் / மனைகள் / கட்டிடங்கள், ஒரே தொழிற்சாலை பெயர் மற்றும் முகவரியைக் கொண்டிருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும்? திறந்தநிலை ஆடை பதிவேடானது பல்வேறு பங்குதாரர்களால் தரவுகள் பகிரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த பங்குதாரர்களில் பலர் தங்கள் திட்டங்கள், பணிகள் அல்லது முன்முயற்சிகளுக்கு, ஒரு தொழிற்சாலையுடன் தொடர்புடைய ஒவ்வொரு சாத்தியமான பிரிவுக்கும் வருகை தருவதை அல்லது கணக்கீட்டை உறுதி செய்ய, மனை/ பிரிவு மட்டத்தில் தொழிற்சாலைத் தரவை தேடுகிறார்கள்.

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் நகல்களை எவ்வாறு தடுப்பது

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் ஒரு பங்களிக்கும் நிறுவனமாக, OAR இல் நகல் உள்ளீடுகளைத் தடுக்க உதவுவதற்கு நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் ஒரு நகல் இல்லாத சுத்தமான தரவுத்தொகுப்பை பதிவேற்றுவதாகும். கவனம் செலுத்த வேண்டிய முதன்மையான இரண்டு விஷயங்களாவன:

 • நீங்கள் பதிவேற்றும் பட்டியலில் நகல் தொழிற்சாலைகள் இல்லை என்பதை உறுதிப்படுத்துதல்
 • உங்கள் பதிவேற்றத்தில் ஒரு வரிக்கு ஒரு மனை/ பிரிவு/ கட்டிடம் மட்டுமே பதிவேற்றவும். இந்த வழியில், எங்கள் அல்காரிதம் மற்றும் தரச்சீர்படுத்தும் குழு எளிதாக பிரிவு வாரியாக உள்ளீடுகள் பொருத்த முடியும்.

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் ஒரு நகல் உள்ளீட்டை எவ்வாறு சுட்டிக்காட்டுவது

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் ஒரு நகல் இருந்தால், தயவுசெய்து OAR குழுவுக்குத் தெரிவிக்கவும். தொழிற்சாலை சுயவிவரத்தில் உள்ள "தரவு திருத்தத்தை பரிந்துரையுங்கள்" இணைப்பைக் கிளிக் செய்தும், நீங்கள் கண்டறிந்த நகல் தொழிற்சாலையின் பெயர் மற்றும் /அல்லது OAR ID ஐப் பகிர்ந்தும் நீங்கள் நகல் குறித்து தெரிவிக்கலாம்.

திறந்தநிலை ஆடை பதிவேட்டில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையை எவ்வாறு தெரிவிப்பது

 • படி 1: ஒரு தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டது என்று உங்களுக்குத் தெரிந்தால், அது சம்பந்தமான ஆவணங்களை வழங்க முடியும் என்றால், திறந்தநிலை ஆடை பதிவேட்டில் அந்த தொழிற்சாலையின் சுயவிவரத்திற்கு சென்று. கிளிக் " தொழிற்சால மூடப்பட்டதாக தெரிவிக்கவும்" என்பதைக் கிளிக் செய்யவும்
 • படி 2: தொழிற்சாலை மூடப்பட்டதைக் தெரிவிக்கும் ஏதேனும் தகவல் அல்லது ஆவணத்தையும் உள்ளிடுமாறு நீங்கள் கேட்டுக்கொள்ளப்படுவீர்கள் (ஒரு செய்தி, மூடப்பட்ட தொழிற்சாலையின் வலைத்தளத்திற்கான இணைப்பு, மூடப்பட்டதற்கான காகித ஆவணங்கள் முதலியன). நீங்கள் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் என்றால், அந்த ஆவணத்தை info@openapparel.org என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
 • படி 3: இந்த தொழிற்சாலை மூடப்பட்டதற்கான அறிக்கையின் தரத்தை தீர்மானிக்க நீங்கள் உள்ளிட்ட ஆவணத்தை OAR குழு மதிப்பாய்வு செய்யும்.
 • படி 4: தொழிற்சாலை மூடப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டால், தொழிற்சாலை இன்னுமே திறந்தநிலை ஆடை பதிவேட்டில் காட்டப்படும் (நாங்கள் கருவியில் இருந்து தரவை நீக்குவதில்லை), ஆனால் அதன் மீது தொழிற்சாலை மூடப்பட்டதைக் குறிக்கும் லேபிள் இருக்கும்.
 • படி 5: ஒரு தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டால், ஒரு மூடப்பட்ட தொழிற்சாலை சுயவிவரத்தில் " தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தெரிவிக்கவும்" என்பதைத் தேர்ந்தெடுத்து அதே செயல்முறையை மீண்டும் செய்யலாம்,