சிவில் சொசைட்டி நிகழ்வு ஆய்வு: வணிக மற்றும் மனித உரிமைகள் வள மையம்

"ஒரு இலவச, பொது பதிவேடாக, OAR பெருநிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைக்கு, எங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது."

தொழிலாளர் பணி நீக்கங்கள் மற்றும் ஊதியம் வழங்கப்படாததற்கு BHRRC விரைவாக பதிலளிக்கிறது

வழக்கு 1:

2019 இன் தொடக்கத்தில், கம்போடியாவில் சலுகைகள் வழங்கப்படாததற்காக வேலைநிறுத்தம் செய்ததற்காக 1,000 க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் நீக்கப்பட்டதற்கு BHRRC விரைவாக பதிலளிக்க OAR தரவு உதவியது.

BHRRC. தொழிற்சாலையில் இருந்து பெறப்படும் பிராண்டுகளை அடையாளம் காணவும், அவற்றின் பதில் மற்றும் செயல் திட்டத்தைக் கேட்கவும் OAR ஐ விரைவாகப் பயன்படுத்த முடிந்தது. இரண்டு பிராண்டுகள் பதிலளித்து விசாரணைகளைத் தொடங்கின. பிராண்ட் தலையீடுகள் உட்பட பல தரப்பிலிருந்தும் வந்த அழுத்தத்தின் காரணமாக, பெரும்பாலான தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

"நிச்சயமாக, பணிநீக்கம் மற்றும் ஆட்சேர்ப்புக் கட்டணங்கள் அடிப்படையில் இன்னும் நிறைய செய்ய வேண்டும், ஆனால் இதுவரை அடையப்பட்ட இந்த தாக்கங்கள் கூட OAR இல்லாமல் சாத்தியமில்லை!"

வழக்கு 2:

ஆகஸ்ட் 2019 இல், BHRRC மொரீஷியஸில் ஒரு தொழிற்சாலை மூடப்பட்ட பிறகு பிராண்டுகளை மீண்டும் கண்டுபிடிக்க OAR ஐப் பயன்படுத்தியது. இந்த மூடல் பங்களாதேஷ் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தவிக்க வைத்ததுடன் ஊதியங்களையும் வழங்கவில்லை.

பிராண்டுகளை அணுகிய பின்னர், BHRRC தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்ய தொழிற்சாலையில் இருந்து பெறுகின்ற ஒரு பெரிய பிராண்ட் மற்றும் உள்ளூர் தொழிற்சங்கத்துடன் இணைந்து பணிபுரிய முடிந்தது (முந்தைய ஊதியம், சிலருக்கு மறு வேலைவாய்ப்பு, சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்புவற்கு மொரீஷியஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள், நீர் மற்றும் மின் இணைப்புகளை மீண்டும் நிறுவுதல் போன்றவை).

"ஒரு இலவச, பொது பதிவேடாக, OAR பெருநிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைக்கு, எங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. இது எங்கள் பணிக்கு உடனடி நன்மைகளைக் கொண்டு வருகிறது. உதாரணமாக, ஆடை தொழிற்சாலைகளில் எங்களுக்கு புகாரளிக்கப்பட்ட துஷ்பிரயோகத்தை கண்காணிக்கவும், பிராண்டுகள் அவற்றின் வநியோகச் சங்கிலிகளில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிந்திருப்பதை உறுதி செய்யவும், பொறுப்புணர்வை நாடவும் - துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர உரிய விடாமுயற்சி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண வும் OAR ஐப் பயன்படுத்துகிறோம்.

ஒட்டுமொத்த தொழில்துறைக்கும் மகத்தான ஆதாயங்களை நாம் காண்கிறோம். நிறுவனங்கள், சிவில் சமூகம், முதலீட்டாளர்கள் மற்றும் அரசாங்கங்களுக்குள் மனித உரிமைகள் வாதிடுபவர்கள், ஆடை விநியோகச் சங்கிலிகள் முழுவதும் மனித உரிமைகளுக்கு நிலைத்தன்மை மற்றும் மரியாதையை அடைவதற்குத் தேவையான மாற்றத்தை உந்த உதவ இதைப் பயன்படுத்தலாம்."

பில் ப்ளூமர் நிர்வாக இயக்குனர், வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் மையம்

Image shows the logo of Business & Human Rights Resource Centre.

BHRRC என்பது வர்த்தகத்தில் மனித உரிமைகளை முன்னெடுப்பதற்கும் துஷ்பிரயோகத்தை ஒழிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது சமூகங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மனித உரிமைகள் குறைகளைத் தீர்க்க நிறுவனங்களுக்கு உதவுகிறது, மேலும் நிறுவனங்கள் தங்கள் பதிலை முழுமையாக வழங்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 9,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மனித உரிமைகள் கொள்கை மற்றும் செயல்திறனைக் கண்காணித்து தகவல்களை பகிரங்கமாக கிடைக்கச் செய்கிறது. இது நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இணைந்து தகவல்களை பகிரங்கமாக பகிர்ந்து கொள்ளுமாறு அவர்களை வலியுறுத்துகிறது.