தொழிற்சாலைகள்

OAR இல் உங்கள் தொழிற்சாலையைப் பட்டியலிடவும்
திறந்தநிலை ஆடை பதிவேடு என்பது ஆடை தொழிற்சாலைகள் தரவுகளைக் கொண்ட மிகப்பெரிய திறந்தநிலை தரவுத்தளமாகும். சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு உங்கள் சுயவிவரத்தைக் காண்பிக்க உங்கள் தொழிற்சாலை தரவைச் சமர்ப்பிக்கவும் மற்றும் வாடிக்கையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உங்கள் தொழிற்சாலை எந்த வைகையானது என்பதை தெரிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்ய உங்கள் இலவச OAR ID ஐப் பயன்படுத்தவும்.
ஏன் OAR இல் உங்கள் தொழிற்சாலை (களைப்) பட்டியலிட்டு கோர வேண்டும் மற்றும் OAR ID ஐப் பெற வேண்டும்:
பிராண்டுகள் ஏற்கனவே OAR இல் உங்கள் தொழிற்சாலை(களை) பட்டியலிடுகின்றன. பகிரப்பட்ட தகவல் சரியாக இருப்பதை உறுதி செய்யவும்.
புதுப்பித்த சுயவிவரங்கள் புதிய வர்த்தக உறவுகளுக்கு வழிவகுக்கின்றன மற்றும் பிற வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் காணக்கூடிய இணைப்புகள் மூலம் நம்பகத்தன்மையை உருவாக்குகின்றன.
உங்கள் தொழிற்சாலையின் பெயர் மற்றும் / அல்லது முகவரியில் வேறுபாடுகள் இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு குழப்பத்தை நீக்கி, தனித்துவமான, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சாலை ID ஐப் பெறவும்.
ஒரு தொழிற்சாலையைக் கோருவது உரிமையாளர்கள் மற்றும் / அல்லது மூத்த நிர்வாகத்திற்கு உற்பத்தித் திறன்கள், MOQs, சான்றிதழ்கள் மற்றும் இன்னும் பல உட்பட தொழிற்சாலை சுயவிவரத்தில் கூடுதல் தகவலைச் சேர்க்க உதவுகிறது.
"திறந்தநிலை ஆடை பதிவேட்டுடன் இணைந்துள்ள தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை குழுமங்களுக்கு உண்மையான நன்மைகள் இருப்பதாக அரவிந்த் லிமிடெட் நம்புகிறது. தளத்தில் தெரியும் இணைப்புகள் மூலம் உங்கள் தொழிற்சாலைகள் உறவுகளை விளக்க முடிவதன் மூலமும் ஒரு சரிபார்க்கப்பட்ட ஆதாரமாக மக்களை OAR க்கு வழிநடத்துவதன் மூலமும், OAR சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர் இடையே நம்பிக்கையை மேம்படுத்த உதவுகிறது.
- அரவிந்த் லிமிடெட்
OAR இல் உங்கள் தொழிற்சாலைகளை எவ்வாறு இணைப்பது மற்றும் கோருவது:
OAR இல் உங்கள் தொழிற்சாலை அல்லது தொழிற்சாலைகளை பட்டியலிடவும் நிர்வகிக்கவும் விருப்பமாக இருக்கிறீர்களா? இது முற்றிலும் இலவசம் மற்றும் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் வெறும் ஒரு சில படிகளே.
1. உங்கள் தொழிற்சாலை(களை) இணைக்கவும்: இலவச கணக்கை உருவாக்கி, உங்கள் தொழிற்சாலை(களைப்) பதிவேற்ற இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும் (நீங்கள் ஒரு தொழிற்சாலையை சொந்தமாகவோ / பிரதிநிதியாகவோ பிரதிநிதித்துவப்படுத்தினால், நீங்கள் ஒரு தொழிற்சாலையைக் கொண்ட பட்டியலை பதிவேற்றலாம்). உங்கள் பட்டியலை நீங்கள் பதிவேற்றும்போது, ஏற்கனவே தரவுத்தளத்தில் உள்ளவற்றுடன் உங்கள் தொழிற்சாலைகளைப் பொருத்துவதற்கு OAR அல்காரிதம் வேலை செய்யும். வெளிப்படையாக நகல்கள் என தெரிந்தவற்றிற்கு அல்காரிதம் தானாகவே அவற்றைப் பொருத்தும். அல்காரிதம் 80% கீழே இருக்கும்போது ஏற்கனவே தரவுத்தளத்தில் உள்ளவற்றுடன் உங்கள் தொழிற்சாலைகளின் பொருத்தங்களை கைமுறையாக உறுதிப்படுத்த அல்லது நிராகரிக்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்களின் அனைத்து தொழிற்சாலைகளும் OAR இல் காண்பிக்கப்பட, இந்தப் படியை நிறைவுசெய்ய மறக்காதீர்கள்.
2. உங்கள் தொழிற்சாலை(களை) கோரவும்: உங்கள் தொழிற்சாலை(களை) பதிவேற்றி முடித்தவுடன், இந்த ஸ்கிரீன்ஷாட்டில்காட்டப்பட்டுள்ள படி, உங்கள் தொழிற்சாலை சுயவிவரங்கள் ஒவ்வொன்றின் மீதும் "இந்த தொழிற்சாலையைக் கோரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். ஒவ்வொரு தொழிற்சாலையாக கிளிக் செய்ய வேண்டும், எனவே நீங்கள் பல தொழிற்சாலைகளை பதிவேற்றினால், அவை ஒவ்வொன்றையும் நீங்கள் கோர வேண்டும். உங்கள் அடையாளத்தை சரிபார்க்க மூன்று குறுகிய படிகளை நிறைவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள், இதற்கு 5 நிமிடங்களுக்கு மேல் ஆகாது. உங்கள் கோரிக்கை சரிபார்க்கப்பட்டவுடன், கூடுதல் தரவு புள்ளிகளை நீங்கள் சேர்க்க முடியும்.

OAR ஐ தமிழில் பயன்படுத்தவும்
100 க்கும் மேற்பட்ட மொழிகளில் OAR ஐப் பார்வையிடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த ஸ்கிரீன்ஷாட்டில் காட்டியுள்ளபடி "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" என்பதைக் கிளிக் செய்து உங்கள் விருப்பமான மொழிக்கு மாற்றவும்.

இந்த செயல்முறையின் ஏதேனும் பகுதிகளை பற்றி கேள்விகள் உள்ளனவா? மின்னஞ்சல் செய்யவும் info@openapparel.org.
இந்த செயல்முறையின் ஏதேனும் பகுதிகளை பற்றி கேள்விகள் உள்ளனவா? மின்னஞ்சல் செய்யவும் info@openapparel.org.