சிவில் சொசைட்டி

OAR க்கு பங்களித்தல் மற்றும் பயன்படுத்துதல்
உலகெங்கிலும் உள்ள சிவில் சொசைட்டி அமைப்புகள் தங்கள் பணிகளுக்கு ஆதரவாக திறந்தநிலை ஆடை பதிவேட்டிற்கு தரவுகளை வழங்குகின்றன மற்றும் / அல்லது அதைப் பயன்படுத்துகின்றன. இவற்றைச் செய்ய OAR ஐ எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான சில ஆதாரங்களும் வழிமுறைகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உத்வேகத்தைத் தேடுகிறீர்களா மற்றும் பிற சிவில் சொசைட்டி அமைப்புகள் OAR தரவை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதைக் கேட்க விரும்புகிறீர்களா?
சிவில் சொசைட்டி அமைப்புகள் பின்வருவனவற்றிற்கு OAR ஐப் பயன்படுத்துகின்றன:
தீர்வுக்கான அணுகலை விரைவுபடுத்த எந்த பிராண்டுகள் / நிறுவனங்கள் தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவதற்கு
பாதுகாப்பு கருத்திட்டங்களுக்கு முன்னுரிமை பிராந்தியங்களை தீர்மானிக்க சுற்றுச்சூழல் தரவுகளுடன் தொழிற்சாலை தரவுகளை இணைப்பதற்கு
குறிப்பிட்ட பிராந்தியங்களில் உள்ள தொழிற்சாலைகளுடனான தொடர்புகளின் அடிப்படையில், ஒரு திட்டத்திற்கு எந்த நிறுவனங்கள் வலுவான பங்குதாரர்களாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு
OAR ஐத் தேடுதல்
திறந்தநிலை ஆடை பதிவேட்டில் உள்ள தரவை எவரும் கைமுறையாக தேடவும் பதிவிறக்கவும் இலவசமாக கிடைக்கிறது. நீங்கள் தேடும் OAR தேடலை எவ்வாறு அமைக்கலாம் என்பதற்கான உதவிக்குறிப்புகளுக்கு இந்த வளத்தைப் படிக்கவும்.
ஒரு இலவச, பொது பதிவேடாக, OAR பெருநிறுவன வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமைக்கு, எங்களுக்கும் பங்குதாரர்களுக்கும் ஒரு முக்கிய கருவியாக மாறியுள்ளது. இது எங்கள் பணிக்கு உடனடி நன்மைகளைக் கொண்டு வருகிறது. உதாரணமாக, ஆடை தொழிற்சாலைகளில் எங்களுக்கு புகாரளிக்கப்பட்ட துஷ்பிரயோகத்தை கண்காணிக்கவும், பிராண்டுகள் அவற்றின் வநியோகச் சங்கிலிகளில் உள்ள விதிமீறல்கள் குறித்து தெரிந்திருப்பதை உறுதி செய்யவும், பொறுப்புணர்வை நாடவும் - துஷ்பிரயோகத்தை முடிவுக்குக் கொண்டுவர உரிய விடாமுயற்சி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு காண வும் OAR ஐப் பயன்படுத்துகிறோம்.
வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் மையம்

OAR ஐ தமிழில் பயன்படுத்துதல்
100 க்கும் மேற்பட்ட மொழிகளில் OAR ஐப் பார்வையிடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த ஸ்கிரீன்ஷாட்டில் காட்டியுள்ளபடி "மொழியைத் தேர்ந்தெடுக்கவும்" என்பதைக் கிளிக் செய்து உங்கள் விருப்பமான மொழிக்கு மாற்றவும்.
OAR க்குப் பங்களித்தல்
உங்கள் திட்டங்களின் ஒரு பகுதியாக ஆடை தொழிற்சாலையின் பெயர் மற்றும் முகவரி தரவைச் சேகரிக்கிறீர்களா? சிவில் சொசைட்டி அமைப்புகள் OAR க்குத் தரவுகளை வழங்குவதில் முக்கிய பங்குதாரராக உள்ளனர். எப்படி என்பதை இங்கே காண்போம்:
பதிவு: நீங்கள் ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால், ஒரு இலவச OAR கணக்குக்குப் பதிவு செய்யவும்.
- தயார்செய்தல் + பதிவேற்றுதல்: நீங்கள் சேகரித்த தொழிற்சாலை தரவின் ஒரு CSV அல்லது எக்செல் கோப்பை தயார் செய்து, OAR இன் பங்களிக்கும் பக்கத்தில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அதை OAR இல் பதிவேற்றவும். உங்கள் தரவை தயாரிக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
உங்கள் பட்டியலை நகலெடுக்கவும். உங்கள் பட்டியலில் உள்ள தொழிற்சாலைகள் ஏற்கனவே OAR உள்ளதா என்பதை OAR அல்காரிதம் சரிபார்த்து அதற்கேற்ப பொருத்தும். எனினும், அல்காரிதம் உங்கள் பட்டியலில் உள்ள நகல்களை நீக்காது. எனவே, பதிவேற்றுவதற்கு முன் உங்கள் பட்டியலில் இருந்து நகல் தொழிற்சாலைகளை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். OAR ஒரு நகல் என்று கருதப்படுவது எது என்பது பற்றி மேலும் படிக்கவும்.
உங்கள் மனைகள் / பிரிவுகள் / கட்டிடங்களைப் பிரிக்கவும். உங்கள் பதிவேற்றத்தில் ஒரு வரிக்கு ஒரு மனை/ பிரிவு/ கட்டிடம் மட்டுமே பதிவேற்றவும். இந்த வகையில், எங்கள் அல்காரிதம் மற்றும் மாடரேஷன் குழு எளிதாக பிரிவு வாரியாக உள்ளீடுகளைப் பொருந்தும் முடியும்.
உதவிக்குறிப்பு: உங்கள் பட்டியல்களை பிரிக்க வேண்டுமா? திறந்தநிலை ஆடை பதிவேட்டில் பயனர்கள் பட்டியல் வாரியாக தேடமுடியும். அதாவது உங்கள் பட்டியலின் பெயர் வெளிப்படையாகக் காட்டப்படும். உங்கள் நிறுவனம் செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களைப் போல, தேடக்கூடிய வகையில் உங்கள் தொழிற்சாலைகளைப் பிரிக்க விரும்பினால் இது பயனுள்ளதாக இருக்கும்.

தவறுகளைச் சரிசெய்யவும்: உங்கள் பட்டியல் செயலாக்கப்பட்டவுடன் ஒரு மின்னஞ்சல் அறிவிப்பைப் பெறுவீர்கள். இந்த அறிவிப்பைப் பெற்றவுடன், உங்கள் தரவில் ஏதேனும் பிழைகள் உள்ளதா என்று சரிபார்க்கவும், FAQs (ஒரு பொதுவான மற்றும் எளிதாக சரிசெய்யக்கூடிய தவறு, எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் பெயரில் உள்ள எழுத்துப்பிழை,) இல் உள்ள "OAR இல் உள்ள செயலாக்க தரவு" பிரிவைப் பார்க்கவும். உங்கள் CSV அல்லது எக்செல் கோப்பில் உள்ள தவறுகளைச் சரிசெய்து, உங்கள் முந்தைய கோப்பை மாற்றி, அதை மீண்டும் OAR இல் பதிவேற்றவும்.
உறுதிப்படுத்தவும் / நிராகரிக்கவும்: உங்கள் பட்டியலை நீங்கள் பதிவேற்றும்போது, OAR இல் இயங்கும் அல்காரிதம் ஏற்கனவே தரவுத்தளத்தில் உள்ளவற்றுடன் உங்கள் தொழிற்சாலைகளைப் பொருந்த வேலை செய்யும்.வெளிப்படையாக நகல்கள் என தெரிந்தவற்றிற்கு அல்காரிதம் தானாகவே அவற்றைப் பொருத்தும். அல்காரிதம் 80% கீழே இருக்கும்போது ஏற்கனவே தரவுத்தளத்தில் உள்ளவற்றுடன் உங்கள் தொழிற்சாலைகளின் பொருத்தங்களை கைமுறையாக உறுதிப்படுத்த அல்லது நிராகரிக்கும்படி கேட்கப்படுவீர்கள். உங்களின் அனைத்து தொழிற்சாலைகளும் OAR இல் காண்பிக்கப்பட, இந்தப் படியை நிறைவுசெய்ய மறக்காதீர்கள்.
நீங்கள் சமர்ப்பித்த தொழிற்சாலைகளுடன் வேறு யார் இணைந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவும்: நீங்கள் OAR க்கு பங்களித்தவுடன், மற்ற எந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் அவற்றுடன் இணைந்துள்ளன என்பதைப் பார்க்க நீங்கள் சமர்ப்பித்த ஒவ்வொரு தொழிற்சாலைகளின் OAR சுயவிவரங்களைப் பார்க்கவும்.

இந்த செயல்முறையின் ஏதேனும் பகுதிகளை பற்றி கேள்விகள் உள்ளனவா? மின்னஞ்சல் செய்யவும் info@openapparel.org.